Skip to main content

‘கவர்மெண்ட் பஸ்ஸுக்கு வழிவிடனும்’ - இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Government bus driver indiscriminately assaults youth 'giving way to government bus'

 

சாலையில் வழி விடவில்லை எனக் கூறி தனக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த செவ்வாய் (22/11/22) அன்று பிற்பகல் யெலஹங்காவில் இரண்டு மாநகரப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. தனக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தினை வழிவிடுமாறு அரசுப் பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். பேருந்திற்கு வழிவிட்டு பக்கவாட்டில் ஒதுங்கிய நபரை பேருந்தைக் கொண்டு ஓட்டுநர் மறித்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கி அவரது செல்போன் மற்றும் வண்டியின் சாவியையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

 

தனது செல்போனை வாங்க பேருந்தில் ஏறிய இளைஞரை பேருந்தின் உள்ளே வைத்து மீண்டும் தாக்கியுள்ளார். இளைஞரின் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக இளைஞரைத் தாக்கியுள்ளார். இதனை அப்பேருந்தில் பயணித்த சகபயணி வீடியோவாக எடுக்க, இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது.

 

தாக்குதலுக்கு உள்ளான நபர் யெலஹங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், இரு மாநகராட்சி பேருந்துகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றதாகவும் தனக்கு வழிவிடும் படி ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததாகவும் நான் வழிவிட்டு ஒதுங்கிய பின் பேருந்தினை என் குறுக்கே நிறுத்தி பேருந்தில் இருந்து இறங்கி தன்னைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அதே சமயத்தில் ஓட்டுநர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தன்னை பார்த்து ஆபாசமாக விரலை உயர்த்தி சைகை காட்டியதாகவும், அதன் காரணமாகத்தான் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இது குறித்தான வீடியோ காட்சிகள் வேகமாக பரவ ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.