Skip to main content

திருப்பதி வனப்பகுதியில் சிறுமியின் சடலம்; யாத்திரைக்கு வந்தபோது நிகழ்ந்த துயரம்   

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Girl's body found in Tirupati forest; Tragedy that happened on the pilgrimage

 

திருப்பதி மலைப்பாதையில் பெற்றோர்களுடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி கரடி தாக்கி உயிரிழந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக வனத்துறை அதிகாரியின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோர்களுடன் இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுத்தை அல்லது வனவிலங்குகள் ஏதேனும் இழுத்து சென்றிருக்கலாம் என அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மகள் காணாமல் போனது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் வனத்தின் பல பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

 

தொடர் தேடுதலுக்கு பிறகு  காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,  திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்கும். திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கணவனின் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவி; அடுத்து நடந்த சோகம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
A wife who condemned her husband's adulterous relationship

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் எலெஜ்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம், மணிகண்டனின் குடும்பத்துக்கு தெரியவர, தனது பெண் தோழியோடு எடப்பாடி அருகே வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, தனது கணவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

பின்னர், மணிகண்டன் வளையசெட்டியூர் பகுதியில் இருப்பதை அறிந்த அவரது மனைவி அந்த இடத்துக்கு சென்று மணிகண்டனின் தகாத உறவைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு வரும்படி அழைத்துள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மதுபானக் கடை அருகில் விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வைத்திருந்த தகாத உறவை மனைவி கண்டித்ததால், எலெக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'நகைக்காகப் பாசத்தைப் பொழிந்த மாமியார்; மருமகள் எடுத்த சோக முடிவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Mother-in-law who showered affection on jewelry; A sad decision taken by the daughter-in-law

நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மருமகள் மாமியார் இடையே ஏற்பட்ட சண்டையில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி. ஆட்டோ ஓட்டி வந்த பிரேம்குமார் டிவி ஷோரூமில் பணியாற்றி வந்த மஞ்சுளாவை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருமகள் மஞ்சுளாவை நன்கு கவனித்து வந்த மாமியார் சித்ரா, மஞ்சுளா அணிந்திருந்த 15 சவரன் நகைகளில் 12 சவரன் நகையை அவசர தேவைக்காக கேட்டுள்ளார்.

மஞ்சுளாவும் மாமியார் சித்ராவிற்கு நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நகையை திரும்பத் தரும்படி மாமியார் சித்ராவிடம் மஞ்சுளா கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பாசத்தை பொழிந்த மாமியார் சித்ரா மருமகள் மீண்டும் நகையை கேட்டதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அடிக்கடி மாமியார் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மணிமங்கலத்தில் தனியாக வீடு எடுத்து பிரேம்குமாரும் மஞ்சுளாவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன் பிரேம்குமாரிடம் நகையைக் கேட்டு வாங்கி தரும்படி மஞ்சுளா கேட்ட பொழுது பிரேம்குமாருக்கும் மஞ்சுளாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால்  வீட்டின் அறைக்குள் சென்ற மஞ்சுளா பல மணி நேரமாகியும் வெளியே வராததால் பிரேம்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்துக் கொண்டு சென்ற பொழுது உள்ளே மின்விசிறியில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மஞ்சுளாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து, உடனடியாக தன்னுடைய மகளின் உயிரிழப்பு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.