girl who stopped the auto alone to save her mother

கர்நாடக மாநிலம் மங்களூர் ராஜரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் சேதனா(35). இவர் சம்பவத்தன்று டியூசன் சென்ற தனது மகளை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலை அருகே நின்றவரின் மிது மோதியதுடன் சாலையை கடக்க முயன்ற சேதனா மீதும் மோதி அவர் மீது கவிழ்ந்தது.

Advertisment

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சேதனாவின் மகள் உடனடியாக ஓடி வந்து தனது முழு திறனை ஒன்றாகத் திரட்டி ஆட்டோவை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தினார். அப்போது அந்த பெண்ணிற்கு உதவ ஓடி வந்தவர்கள் சேதனா மற்றும் ஆட்டோவில் இருந்தவர்களை மீட்டனர். சிலருக்கு லோசான காயம் ஏற்பட்டது.

Advertisment

இதனையடுத்து காயப்பட்ட சேதனா அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தாய்யை காப்பாற்ற ஒற்றையாளாக ஆட்டோவை தூக்கிய சிறுமியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.