Skip to main content

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுமி; மீட்கும் பணியில் சிக்கல்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

A girl trapped in a borehole; Problem with recovery

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 300 அடி உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு  வருகிறது. 

 

ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து சிக்கிக் கொள்வதும், அதில் சிலர் காப்பாற்ற முடியாமல் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஆழ்துளைக் கிணறு தொடர்பாக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியும் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

 

மத்தியப் பிரதேச மாநிலம், சிகோரி மாவட்டத்தில் உள்ள மொங்ஹலி கிராமத்தில் 3 வயது சிறுமி தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மீட்புப் படைக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். 

 

ராட்சச இயந்திரம் மூலமாக 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் உள்ள பகுதியைத் தோண்டும் பணியை மேற்கொள்ளும் போது அந்த சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கிருப்பது தெரிய வந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுமியைப் பாதுகாப்பதற்காக மருத்துக் குழுவினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சிறுமிக்குக் குழாய் ஆக்ஸிஜன் கொடுத்து வருகின்றனர்.

 

மீட்புப் படையினர் சிறுமியை மீட்கக் கடுமையாகப் போராடி வந்தாலும், அந்த ஆழ்துளைக் கிணற்றில் 20 அடிக்குக் கீழ் முழுவதும் பாறைகளாக உள்ளதால் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜகவிற்கு கடைசிவரை டஃப் கொடுத்த 'நோட்டா'

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
 'Nota' gave tough to BJP till the end

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

 'Nota' gave tough to BJP till the end

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு கடும் சவாலை கொடுத்துள்ளது 'நோட்டா'. நான்காம் கட்ட தேர்தல் கடந்த மே 13ம் தேதி இந்தூர் தொகுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அக்ஷை கண்டி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது அவர் தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றதோடு பாஜகவிற்கு தாவி விட்டார்.

 'Nota' gave tough to BJP till the end

அதனைத் தொடர்ந்து காங்கிரசின் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்தூரில் காங்கிரஸ் போட்டியிடாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பாஜகவிற்கு எதிரான பலம் வாய்ந்த வேட்பாளர் எதிரணியில் இல்லாதது பாஜகவிற்குக் கூடுதல் பலத்தை கொடுத்திருந்தது. ஆனால் இந்தூர் தொகுதி மக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். இதன் பாதிப்பு வாக்கு எண்ணிக்கையில் அப்படியே பிரதிபலித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சங்கர் லால் வானி முதலிடத்தில் இருந்தாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது 'நோட்டா' இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தனர். மொத்தமாக பார்த்தால் நோட்டாவிற்கு 14.03% வாக்குகள் கிடைத்தது. இதனை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைமை 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜகவிற்கு  இது ஒரு பாடம்' என பதில் கொடுத்துள்ளது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.