நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இதற்கு முன்பு வகித்து வந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியின் முப்படை தலைமை தளபதி பொறுப்பு குறித்து அறிவித்ததையடுத்து, முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலான முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவிக்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இன்று முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிபின் ராவத் வகித்துவந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே பதவியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மனோஜ் முகுந்த் நரவானே இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ராணுவ துணைத் தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவானே இந்தியாவின் 28 ஆவது ராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.