Skip to main content

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் எரிவாயு விலை அதிகம்!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

Gas prices in India are higher than in countries including Britain!

 

உலக அளவில் 54 நாடுகளின் விளையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் எரிவாயு விலை மிக அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

 

சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகமாக இருக்கிறது. முன்னேறிய நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் எரிவாயு விலை அதிகமாக இருக்கிறது. 

 

உதாரணமாக, சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்பு 22.6 ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு லிட்டர் எரிவாயுவின் விலை 77 ரூபாயாக உள்ளது. இதுவே, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஒரு லிட்டர் எரிவாயுவின் விலை 31 ரூபாயாகவும், பிரிட்டனில் 22 ரூபாயாகவும் உள்ளது. 

 

இதேபோல, 154 நாடுகளின் பெட்ரோல் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. டீசல் விலை அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச நிதியம் தினசரி உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டு, பெட்ரோலுக்காக மக்கள் செலவிடும் தொகையை வகைப்படுத்தியுள்ளது. 

 

அதன்படி, இந்தியர்கள் தங்களது சராசரி வருவாயில் நான்கில் ஒரு பங்கை பெட்ரோல் வாங்குவதற்காக செலவிடுவது தெரிய வந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்