Skip to main content

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

Published on 04/10/2023 | Edited on 05/10/2023

 

Gas cylinder price reduction

 

உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த 200 ரூபாயாக இருந்த மானியத் தொகை 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

முன்னதாக கடந்த 1 ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் 203 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ரூபாய் 1,695 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது 1,898 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Cylinder price increase for commercial use

 

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று முதல் (01.12.2023) 1,968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து; வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; அயனாவரத்தில் பரபரப்பு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

A house fire; cylinder incident in Ayanavaram

 

சென்னை அயனாவரத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயனாவரம் மேடவாக்கம் குட்டியப்பன் தெருவில் தனசேகர் என்பவர் வீட்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாக நான்கு தளங்கள் இந்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

 

கீழ்பாக்கம், அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீச்சி அடித்து தீயணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் விடுதி சிதறியது. இதில் முதல் தளத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்தது. இந்த விபத்தால் அருகிலிருந்த வீட்டின் கட்டிடங்களும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்