Skip to main content

ககன்யான் விண்கலம் இஸ்ரோவிடம் ஒப்படைப்பு!

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Gaganyaan spacecraft handed over to ISRO

 

இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் டிவி - டி1 ராக்கெட் மூலம் நேற்று (21.10.2023) காலை 10 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லும் டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

 

மேலும் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி.மீ. தொலைவுக்கு ஏவப்பட்டு பின்னர் பாராசூட் மூலமாக பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலில் விழுந்த ககன்யான் பயணிகள் கலன் இந்திய கப்பல் படையால் மீட்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் இஸ்ரோவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் முதற்கட்டமாக சோதனை முறையில் விண்ணில் ஏவப்பட்ட ககன்யான் விண்கலம், பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து அதனை இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுமார் 4 டன் எடை கொண்ட விண்கலத்தை கனரக கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்பு மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் விண்வெளி வீரரைத் திருமணம் செய்த தனுஷ் பட நடிகை

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
actress leena married gaganyaan astronauts prashanth nair

தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கேரள நடிகை லீனா. தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான், திரௌபதி, நயன்தாராவின் ஓ2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு 2013 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். 

இதையடுத்து தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ககன்யான் விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை மணந்துள்ளதாகத் தெரிவித்த அவர், திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி ககன்யான் வீரர்களை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் பிரசாந்த் நாயருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இதனை அறிவித்துள்ளார். 

மேலும் அந்த பதிவில், “பிரதமர் மோடி, இந்திய விமானப்படை போர் விமானி கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கு முதல் இந்திய விண்வெளி வீரர் விருது வழங்கினார். நமது நாட்டிற்கும் நமது கேரள மாநிலத்திற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம். நான் 17 ஜனவரி, 2024 அன்று பிரசாந்தை பாரம்பரிய முறைப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டேன்” என்றார்.