Four state election results; Published lead status

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

Advertisment

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8:30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 27இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 17இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவை ஆறு இடங்களிலும்முன்னிலையில் உள்ளன.

Advertisment

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 65இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 37 இடங்களில்முன்னிலையில் உள்ளது.ராஜஸ்தானில் பாஜக 45இடங்களில்முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 36இடங்களிலும், மற்றவைஇரண்டு இடங்களில்முன்னிலையில்உள்ளன. சத்தீஸ்கரில் 29இடங்களில் காங்கிரஸ்முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக 23இடங்களில் முன்னணியில் உள்ளது.