Skip to main content

மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்; மீட்புப்பணிகள் தீவிரம்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Floating Northeast States; Intensive rescue work

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26 ஆம் தேதி (26.05.2024) நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவி பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தற்காலிக சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ரிமால் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சூழ்நிலையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் விரிவான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

Floating Northeast States; Intensive rescue work

இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ராணுவ அதிகாரி அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று (30.05.2024) வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்ட நபர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்ய ஏராளமான வீடுகளுக்குச் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Holiday announcement for schools in 4 circles in Nilgiris

தமிழகத்தில் கடந்த மே,  ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் கடந்த ஒரு சில தினங்களாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக மயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெப்பக்காடு தரைப்பாலம் தரையில் மூழ்கியது. வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக மசனகுடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரெட் அலர்ட் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு இடம் மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.07.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

‘ரெட் அலர்ட்...’ - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
'Red Alert...' - Meteorological Department issued a warning

தமிழகத்தில் கடந்த மே,  ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024)  மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் 21செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால்  நீலகிரி மாவடத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

'Red Alert...' - Meteorological Department issued a warning

அதே போன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதன்படி 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கோயம்புத்தூர்  மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, மஞ்சூர், தோவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக பேரிடர் மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர்.  இந்த ஒவ்வொரு குழுவினரும் உரிய மீட்பு உபகரணங்களுடன் தலா 10 வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.