Skip to main content

பட்டாசு வெடிக்கத் தடை...? பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்! 

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Fireworks ban ...? Green Tribunal Notice!

 

வருகின்ற 14 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் நவம்பர் 7 முதல் 30 -ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா எனக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் பட்டாசுக்குத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பல விதமான கெட்டப்; யூடியூப் பார்த்து சம்பவம் செய்த இளைஞர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Thiruvarur teenager who was involved in theft sentenced to 3 years in jail

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்து விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும், தற்போதைய ஆய்வாளரான சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டி தனபுஷ்பத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார்.

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடங்கள் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றதை கண்டுபிடித்தார், பிறகு நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்தார்.

அப்போது திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை செயல்பட்ட விதம் பொதுமக்களே பாராட்டும் வகையில் இருந்தது. அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திருடினார், என்ன நடந்தது, எப்படி பிடித்தார்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா அப்போது கூறியது, “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார். அந்த வழக்கு நன்னிலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்துவந்தது.

இந்தநிலையில், திருட்டில் ஈடுபட்ட விஜய்க்கு இன்று 2.1.24ஆம் தேதி நன்னிலம் குற்றவியல் நடுவர் பாரதிதாசன், மேற்கண்ட குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10000 அபராத தொகையும், அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி கொடுத்த ஆய்வாளர் சுகுணாவையும், மற்றும் செந்தில்குமாரையும் அரசு வழக்கறிஞர் பாரட்டினார். 

Next Story

வாயுக்கசிவு; ‘காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ - பசுமை தீர்ப்பாயம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
 Green Tribunal Action will be taken against those responsible for gas leakage

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இரவு நேரத்தில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான விசாரணை புத்தாண்டை அடுத்து விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கோரமண்டல் நிறுவனத்தில் அமோனியா குளிரூட்டும் கருவி செயலிழந்ததன் காரணமாக தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அங்குள்ள மக்களிடம் ஏன் எச்சரிக்கை விடுக்கவில்லை?. மேலும், அந்த உர ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அடிக்கடி ஆய்வு ஏன் நடத்தவில்லை?. என்று கேள்வி எழுப்பியது 

இதனை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ‘துறைமுகத்தில் இருந்து நிறுவனத்திற்கு அமோனியா எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட அழுத்தத்தால் தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளது.