Skip to main content

காந்தாரா பாணியில் நடனமாட முயன்று தீ விபத்து

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Fire while trying to dance in Gandhara style

 

அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்பட பாணியில் நடனம் ஆடியவர்கள் தீயில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது நடன நிகழ்ச்சிகளுக்கும் விழக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி வேடம் அணிந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து காந்தாரா படத்தில் வருவதைப் போலவே நெருப்பிற்கு நடுவே நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவர்களை சுற்றி நாலாபுறமும் வட்டமாக பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்பொழுது திடீரென எரிந்து கொண்டிருந்த தீயானது நடனமாடியவர்களின் உடைகளை பற்றி எரிய ஆரம்பித்தது. நடனம் ஆடியவர்கள் மட்டுமல்லாது சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும் தீயில் விழுந்தனர். இந்த விபத்தில் தீக்காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Express train fire in Uttar Pradesh

 

உத்தரப்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரயில் நிலையம் வழியாகச் டெல்லி - தர்பங்கா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 02570) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலின் எஸ்1 பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற பெட்டிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. ரயிலில் தீ விபத்தை தொடர்ந்து உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

இந்த விபத்து குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

Mylapore Sai Baba Temple Fire incident

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்தது. இதனையும் மீறி, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு முதல் மக்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் மீது இருந்த கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலைகளில் இன்று மாலை 06.30 மணியளவில் ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்தது. கோவில் அருகில் ராக்கெட் பட்டாசு வெடித்த போது பறந்து சென்ற பட்டாசு கோயிலின் கோபுரத்தில் இருந்த ஓலையில் விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்