Skip to main content

தலையில் சிக்கிய அலுமினிய பானை... தவித்த மூன்று வயது சிறுவன்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது பிரவம் என்ற கிராமம். இங்கு ஆபிரஹாம் என்பவருக்கு பியான் என்ற பெயரில் 3 வயது குபழந்தை உள்ளது .  வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன், அருகிலிருந்த  அலுமினிய பானையை எடுத்து விளையாடினான். அப்போது தனது தலையில் கவிழ்த்து பார்க்க ஆசைப்பட்டுள்ளான். இந்த முயற்சியில் தான் விபரீதம் நிகழ்ந்துள்ளது. தலையில் மாட்டிய பானை அப்படியே சிக்கிக் கொண்டது. அதனை வெளியே எடுக்க முடியாமல் தவித்துள்ளான். இதையடுத்து அழத் தொடங்கினான்.
 

m



இந்த சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது மகனின் தலையில் பானை சிக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதனை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பின்னர் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்களாலும் பானையை எடுக்க முடியவில்லை. அதற்குள் சிறுவன் பியானின் அழுகை அதிகமானது. பின்னர் சிறுவனை தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வீரர்கள் பானையை அகற்றும் முயற்சியில் இறங்கினர். இரும்பை வெட்டி எடுக்கும் கருவியை கொண்டு பானையை வெட்டி எடுத்தனர். இதில் சிறுவனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  இப்படி விபரீதமாக விளையாடக் கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறி பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆழ்துளை கிணற்றின் மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தான் சுமார் 1.5 வயது குழந்தை ஒன்று இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை உயிருடன் மீட்கப்பட பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளியான முதற்கட்ட தகவலின் படி, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் சாத்விக் என்பதும், குழந்தையின் தந்தை ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.