Skip to main content

ஷாப்பிங் அழைத்துச் செல்லாததால் ஐந்தாம் வகுப்பு சிறுமி தற்கொலை... போலீசார் விசாரணை!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

 The fifth grade issue because she did not take him shopping... Police investigation!

 

ஷாப்பிங் அழைத்துச் செல்லாததால் 11வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூர் சாம்ராஜ்பேட் காவல் எல்லைக்குள் வரும் அனந்தபுராவில் வசித்து வரும் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகளில் ஒருவரான வைஷாலி (11) தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நடைபெறவிருந்த திருவிழா ஒன்றுக்காக வைஷாலிக்கு அவரது தந்தை ஆடை வாங்கி கொடுத்திருந்தார். ஆனால் சகோதரிகளான மற்ற இரண்டு குழந்தைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்காததால் அவர்களுக்கு ஆடை வாங்குவதற்காக பெற்றோர் ஷாப்பிங் சென்றுள்ளனர்.

 

அப்பொழுது  வைஷாலி தன்னையும் அழைத்துச் செல்லும்படியும் தனக்கு மேலும் ஒரு ஆடை வேண்டும் என்றும், பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் வைஷாலியை விட்டுவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளை மட்டும் கூட்டிக்கொண்டு தம்பதியினர் ஷாப்பிங் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள்களுக்கு துணி வாங்க கடைக்கு சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபொழுது வீட்டில் மகள் தூக்கில் தொங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.