Skip to main content

ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்- ல் பணம் எடுக்க கட்டணம்!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

 

Fee for withdrawing money from ATM more than five times!

 

மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைகளுக்கும் தற்போது உள்ள கட்டணத்தில் 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்கு மேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. 

 

தற்போது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தனர். எனவே, ஏடிஎம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும், 20 ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.