Skip to main content

இந்திய ஐ.டி. உலகின் தந்தை காலமானார்...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

fc kohli passes away

 

 

இந்திய ஐ.டி. உலகின் தந்தை என அழைக்கப்படுபவரும், டி.சி.எஸ். நிறுவனத்தின் நிறுவனரும் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஃபகீர் சந்த கோலி (96) நேற்று காலமானார். 

 

1924 ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்த இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய இவர், ஆகஸ்ட் 1951 ஆரம்பத்தில் இந்தியா திரும்பி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது, மும்பை முதல் புனே தடத்தில் டாடா நிறுவன மின் சேவைப் பணிகளை கணினிமயமாக்கியத்தில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

 

அதன்பிறகு டாடா நிறுவனத்தின் கனவுத்திட்டமான தகவல் தொழில்நுட்ப துறையின் அந்நிறுவனம் கால்பதிக்க அடித்தளமிட்ட இவர், செப்டம்பர் 1969-ல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பொது மேலாளரானார். பின்னர், 1974 ஆம் ஆண்டில், அந்நிறுவனத்தின் இயக்குநராகவும், 1994 ஆம் ஆண்டு டி.சி.எஸ் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல 1968 இல் மும்பையில் தொடங்கப்பட்ட டி.சி.எஸ். நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரி எஃப்.சி.கோலி ஆவார். தனது 94 ஆவது வயது வரை தகவல் தொழில்நுட்பத்துறைக்காக பணியாற்றிய இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 

 

இந்திய ஐ.டி துறையின் தனத்தை என அழைக்கப்பட்ட இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஃப்சி கோலி, தகவல் தொழில்நுட்ப உலகிற்கு தனது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். தொழில்நுட்ப துறையில் புதுமை மற்றும் சிறப்பான கலாச்சாரத்தை நிறுவனமயமாக்கியதில் அவர் முக்கிய நபராக இருந்தார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது வருத்தம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தன் டாடாவையும் விட்டுவைக்காத டீப் ஃபேக்  

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

nn

 

அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு பிரபலங்களைப் போல டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பேசி உரையாற்றிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அது டீப் ஃபேக் வீடியோ என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘ரத்தன் டாடா’ பயோபிக் - ஹீரோவாக சூர்யா?

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Sudha Kongara to direct Ratan Tata biopic

 

'துரோகி ' படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இதில் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சூரரைப் போற்று' படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது. இப்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமானார். இப்படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரத்தன் டாட்டா கதாபாத்திரத்தில் சூர்யா அல்லது அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

தொழிலதிபர் ரத்தன் ரத்தன் டாடா,  இந்தியாவில் பெரிய தொழிற் புரட்சிகளை ஏற்படுத்தி மிகப் பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கியவர். டாடா குழுமத்தின் வருமானத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பல விஷயங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. 

 

மேலும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ரத்தன் டாடா, பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவர்களிடம் அறிவுரையும் ஆலோசனையும் வழங்கி வந்தார். இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படும் இந்தத் தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.