முள்ளங்கியைத் திருடியதாகக் கூறி ஐந்து தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாகக் கூட்டிச்சென்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ளது சோகியன் கலன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அசுரன்பால் சிங் லட்டி என்பவரின் விளைநிலத்திற்கு அருகாமையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த அசுரன்பால் சிறுவர்கள் தன் நிலத்தில் இருந்த முள்ளங்கியைத் திருடிவிட்டதாகக் கூறி கடுமையாக அடித்துள்ளார். மேலும், அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலகமாகக் கூட்டிச்சென்றுள்ளார்.

Advertisment

இதனை அந்தப் பாதையில் இருந்தவர்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர். சிறுவர்களின் குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில், அசுரன்பால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர்களை அசுரன்பால் நிர்வாணமாகக் கூட்டிச்சென்ற காட்சியை சாட்சியமாகக் கொண்டு, அவர்மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துணையினர்.