
நவராத்திரியை முன்னிட்டு மக்களிடம் பணம் வசூல் செய்ய சாமியார் ஒருவர் ஜீவசமாதி ஆகப் போவதாக குழிக்குள் இறங்கியநிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழிக்குள் இருந்த சாமியாரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தாஜ்பூர் என்ற கிராமத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் ஜீவசமாதி ஆகப் போகிறேன் என போலி சாமியார் ஒருவர் ஆறடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மூங்கில் குச்சிகளால் மூடப்பட்டிருந்த அந்த குழிக்குள் இறங்கி உள்ளே அமர்ந்திருந்த ஒரு நபர் மற்றும் மேலே அமர்ந்து பூஜைகள் செய்து கொண்டிருந்த இரு நபர்கள் என மொத்தம் மூன்று பேரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)