
கேரளாவில் உணவு கொடுக்க முயன்ற சிறுவனை யானை தும்பிக்கையால் இழுத்துதாக்கமுயற்சிக்க, சிறுவனின் தந்தை மகனை போராடி மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் நாசர் என்பவர் யானை ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அந்த யானைக்கு அவ்வப்போது உணவு கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது நான்கு வயது மகனுடன் யானைக்கு உணவு கொடுக்க சென்றுள்ளார். அப்பொழுது சிறுவனின் கையில் உணவை கொடுத்து யானைக்கு கொடுக்க முற்பட்ட நிலையில், திடீரென மிரண்ட யானை சிறுவனை தும்பிக்கையால் இழுத்து தாக்கியது. இதனால் பதறிப்போன தந்தை சிறுவனை உடனடியாக இழுத்துக்கொள்ள அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர்பிழைத்தான். இந்த காட்சிகள் அருகிலிருந்தவர்களால்படம்பிடிக்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)