
கர்நாடகா, அந்தமான நிக்கோபாரில் இன்று (09/07/2022) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில், கடந்த 15 நாட்களில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட் பிளேயரில் இருந்து 233 கி.மீ. தென்கிழக்கே அதிகாலை 02.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.