/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1734.jpg)
டெல்லியின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மட்டுமல்லாது உத்தரகண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் குடியிருப்பில் இருந்தவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் வெளியே வந்தனர். அதேநேரம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக சக்தி வாய்ந்தநிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. அதேபோல் 2.51க்கு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)