
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அசாம் மாநிலம் நகான் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நான்காக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.