
டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (12.02.2021) இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மத்திய ஆசியா நாடான தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.3ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இந்தியாவில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. இருப்பினும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில், வீடுகளில் தெறிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானிலும் வீடுகளில் தெறிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.