Tragedy for college student

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் புகாரை வாபஸ் பெறாததால் இளம்பெண் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

Advertisment

உத்திரப்பிரதேசம் மாநிலம் சியோனி என்ற இடத்தில் அண்மையில்கல்லூரி மாணவி ஒருவர் அனிஷ் மிஸ்ரா என்ற 38 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அந்த இளம்பெண்அனிஷ் மிஸ்ரா தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் புகார் ஒன்றுயும் அளித்துள்ளார். ஆனால் அனிஷ் மிஸ்ட்ராவோ தன்மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற்றுவிடு என பலமுறை அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளான். ஆனால் அந்த பெண்ணோ தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று அந்த மாணவி எப்போதும்போல சியோனி பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும் வேளையில் அனிஷ் மிஸ்ரா இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணை பின் தொடர்ந்து தன்மீது உள்ள புகாரை திரும்பி பெறவேண்டும் என கேட்டுள்ளான். முடியாது என மறுத்த அந்த பெண்ணைசாலையின் ஒரு பக்கத்திற்குதர தரவென இழுத்து சென்று தலையில் பாராங்கல்லை போட்டு தாக்கியுள்ளான். பிறகு இதைக்கண்ட அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மிஸ்ரா தப்பி சென்றான். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அந்த இளம்பெண்ணும் இறந்துவிட்டார். இது தொடர்பாக உத்தரபிரதேசம் போலீசார் விசாரித்து அனிஷ் மிஸ்ராவை தேடி வருகின்றனர்.