Skip to main content

காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வு; மக்கள் பாதிப்பு

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Due to reduced supply  vegetables to Puducherry,  price has gone up

 

புதுச்சேரியில் நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது குபேர் பெரிய மார்க்கெட். இந்த மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 6 டன் அளவிலான காய்கறிகள் வரும். தற்போது அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து 6 டன்னில் இருந்து 4 டன்னாக குறைந்துள்ளதால் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், முருங்கைக் காய், காலி பிளவர் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி நேற்று முன்தினம் 20 ரூபாய் விற்ற நிலையில் தற்போது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் 60 ரூபாய் விற்ற நிலையில் தற்போது 80 ரூபாய் விற்கிறது. பீன்ஸ்  25 ரூபாய் விற்ற நிலையில் தற்போது 35 ரூபாய் விற்கிறது. முருங்கைக்காய் கிலோ 100 ரூபாய் விற்ற நிலையில் 120 ரூபாய் விற்கிறது. இதேபோன்று தினந்தோறும் காய்கறிகள் விலை உயர்ந்து வருவதால் நுகர்வோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.