d

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisment

இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கரோனா தொற்று பயம் காரணமாகவும் 175 பேர் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கான விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் அயோத்தியில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். அதில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.