a

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் மழை பெய்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றனர். மழையில் மூழ்கியதால் வீடுகளை இழந்து தவிப்போர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

a

இந்நிலையில், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ சேவைகளில் ஈடுபட்டிருப்பதால் நேற்று நடக்கவிருந்த தனது திருமணத்தை மருத்துவர் அருண் சி தாஸ் தள்ளிவைத்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.