Skip to main content

'நாளை இந்த விளக்குகளையெல்லாம் அணைக்க வேண்டாம்' - மத்திய அரசு

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,902 ஆகவும், இந்த வைரஸ் பாதிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் உள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

 Do not turn off streetlights in tomorrow - Central governmentஇதற்கிடையில் நேற்று மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பற்றி மோடி பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரின் இந்த பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காகவும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் மோடி விளக்கேற்றும்படி  கூறியுள்ளார் என்று பலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் நாளை இரவு தெரு விளக்குகளையும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில்  பயன்படுத்தப்படும்  விளக்குகளையும் அணைக்கக் கூடாது என்று மத்திய அரசு தற்போது வலியுறுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனிநபர் பெயரில் அதிகமான சிம் கார்டு வைத்திருந்தால் சிறை! - புதிய சட்டம் அமல்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Implementation of new law on Jail if have too many SIM cards

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பல சிம் கார்டுகளை வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. தனிநபர்கள் தங்கள் பெயரில் பல சிம் கார்டுகளை வைத்திருப்பதால் சட்ட மற்றும் நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், நாட்டில் நடக்கும் குற்றச்செயல் பலவற்றுக்கு தொலைப்பேசி சாதனமே என்று கூறப்படுகிறது. இதனால், தொலைப்பேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 

அதன்படி, 2023ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, கடுமையாக விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதில், ஒரு தனிநபர் 9 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். ஆனால், அவர் 10 சிம் கார்டுகளையோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தாலோ அவர்களுக்கு ரூ50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வரை தான் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. 

வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முதல் முறையாக மீறினால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அந்தக் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சிம் கார்டுகளைப் பெறுவதற்கு வேறு ஒரு பெயரை யாராவது மோசடியாகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் போன்ற பல விதிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

Next Story

'என் நண்பர் மீது தாக்குதல்'-பிரதமர் மோடி கண்டனம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 'Attack on my friend'-PM Modi condemns

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 'Attack on my friend'-PM Modi condemns

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலிலும்,ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை' என குறிப்பிட்டுள்ளார்.