Digvijay Singh who gave up the decision... Election of Congress president in a two-way contest

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிடுவதாகவும் இதற்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த முடிவை திக்விஜய் சிங் கைவிட்டுள்ளதாகவும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திக்விஜய் சிங் ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்பொழுது வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர் என இரு முனைப் போட்டியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.