Skip to main content

சோதனை முறையில் இன்று அறிமுகமாகும் டிஜிட்டல் கரன்சி 

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Digital currency to be launched today in trial mode

 

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று அறிமுகம் செய்கிறது.  

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாய் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். இந்நிலையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி நாடு முழுவதும் இன்று அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

 

அரசின் கடன் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ, வங்கிகள் டிஜிட்டல் கரன்சிக்களை பயன்படுத்துவதற்காக முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை (நவ. 1ம் தேதி) சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. 

 

குறிப்பாக எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்தி அரசின் பத்திரப் பறிமாற்றங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

மேலும், இன்னும் ஒரு மாதத்தில் சில்லறை வணிகப் பிரிவிலும் டிஜிட்டல் கரன்சிக்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்