
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தேவேந்திர குலத்தார், கடையர், குடும்பர், பள்ளர், காலாடி, பன்னாடி, வாதிரியார் உள்ளிட்ட ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து 'தேவேந்திர குல வேளாளர்' என்றழைக்க வழிவகை செய்யும் மசோதாவை, கடந்த ஃபிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்.
இந்தநிலையில், இந்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகி அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.