Skip to main content

"ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இனி கூட்டுறவு வங்கிகள்"- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

delhi union cabinet decision announced minister prakash javadekar

 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர்  உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம், பொருளாதாரம், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர். 

 

delhi union cabinet decision announced minister prakash javadekar

 

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 

இதனால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 கூட்டுறவு வங்கிகள் வருகின்றன. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டத்திருத்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

 

UNION CABINET MINISTERS APPROVES BRIEF MINISTERS AT DELHI


டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (08/07/2021) மாலை காணொளி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், அனுராக் தாகூர், மாண்டவியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது அவர்கள் கூறியதாவது, "சுகாதாரத்துறைக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூபாய் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரோனா சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க இரண்டாம் கட்ட தொகுப்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

 

விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர் தேங்காய் வாரியத் தலைவராக நியமிக்கப்படுவர். ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேங்காய் வாரியத்தில் பிரதிநிதித்துவம் தரப்படும். நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த ரூபாய் 1  லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

 

 

Next Story

மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

prakash javadekar

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தன்னோடு கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

இன்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது. எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.