Skip to main content

பிரிஜ்பூஷண் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

delhi police enquiry brij bhushan uttar pradesh home

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி  பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார்.

 

இதையடுத்து மல்யுத்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகின. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டவா மாவட்டத்தில் உள்ள பிரிஜ்பூஷண் சரண் சிங்கின் வீட்டில் உள்ள பணியாளர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த 12 பணியாளர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது அங்கு பிரிஜ்பூஷண் சரண் சிங்  இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

3 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வன்கொடுமை; ஜாமினீல் வெளியே வந்த குற்றவாளியின் வெறிச்செயல்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

misbehaviour at UP child before 3 years and came out from jail to lost her life

 

3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமீனில் வெளியே வந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தர பிரதேசம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவான் நஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பவான் நஷாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அந்த பெண் வாபஸ் பெற்றால் தான் வெளியே வர முடியும் என்பதை உணர்ந்த பவான் நஷாத், தனது சகோதரர் அசோக் பஸ்வானிடம் கூறி அந்த பெண்ணை வாபஸ் பெற வைக்குமாறு கூறியிருக்கிறார்.

 

அதன்படி, அசோக் பஸ்வானும் பலமுறை அந்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வாபஸ் பெற வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அசோக் பஸ்வான் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, சிறையில் இருந்த பவான் நஷாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின்னர், பவான் நஷாத்தும், அசோக்கும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து, வழக்கை வாபஸ் பெறாததற்காக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியால் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கொலையான அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Express train fire in Uttar Pradesh

 

உத்தரப்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரயில் நிலையம் வழியாகச் டெல்லி - தர்பங்கா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 02570) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலின் எஸ்1 பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற பெட்டிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. ரயிலில் தீ விபத்தை தொடர்ந்து உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

இந்த விபத்து குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்