delhi to impose 2000 rupees fine for people who does not wear mask

Advertisment

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவலின் தொடக்க காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட டெல்லி, பின்னர் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், டெல்லியில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் 7,486 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் மாநிலத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,03,084 ஆக அதிகரித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,943 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், சமூகப்பரவலை தடுக்கும் நோக்கில் டெல்லியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய சூழலில், டெல்லியில் பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவது அம்மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களை முகக்கவசம் அணியவைக்கும் பொருட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தொகையை ரூ.2000 ஆக உயர்த்தியுள்ளது அம்மாநில அரசு.