Death threat to Adipurush narrator

Advertisment

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான போது கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த கொலை மிரட்டல் சம்பவம் உண்மையானது என தெரிய வந்த நிலையில் மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார். இப்படத்தில் ராமர் குறித்து எழுதப்பட்ட வசனங்கள் சர்ச்சை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பாலிவுட் பாடலாசிரியரும், இப்படத்தின் வசனகர்த்தாவுமானமனோஜ் முண்டாஷிர் போலீசில் புகார் அளித்திருந்தார். கொலை மிரட்டலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்கபடக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.