மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

dead body found in bjp booth office at siliguri in west bengal

Advertisment

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியிலுள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் 42 வயதான ஒரு நபரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

உடல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இறந்த நபரின் மனைவி, "அவருக்கு எந்தவிதமான சண்டையோ அல்லது யாருடனும் பகையோ கிடையாது. இது தற்கொலையா அல்லது கொலையா என தெரியவில்லை அதனை முதலில் விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment