Skip to main content

கரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து! - ஒப்புதல் அளித்தது இந்தியா!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

VIRAFIN

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் கரோனா சிகிச்சையில் பயன்படுத்த ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் 'விராஃபின்' என்ற மருந்துக்கு, இந்தியாவின் மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் இன்று அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளது. கரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ad

 

இந்த விராஃபின் மருந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாகக் குணமாக உதவும் என ஸைடஸ் காடிலா நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் 22-25 நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், விராஃபின் செலுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் (செயற்கை சுவாசம்) குறைந்த அளவே தேவைப்படுவதாகவும், கரோனா சிகிச்சையில் பெரும் சவாலாக இருக்கும் சுவாசக் கோளாறைக் கட்டுப்படுத்தும் என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி இந்த மருந்து கிடைக்கும் எனவும் ஸைடஸ் காடிலா நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; ஆட்டோவில் வந்தது யார்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

Tearing down notice pasted at Jaber Sadiq's house; Police investigation

அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சாந்தோம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த புதன்கிழமை வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதோடு, வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு சென்றிருந்தனர். இப்பொழுது வரை ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த ஜாபர் சாதிக்கின் தாயார் உறவினர் ஒருவருடன் வந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்தெறிந்ததோடு, வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் வந்த ஆட்டோ எண் மற்றும் அவருடன் வந்த உறவினர் யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.