Skip to main content

ஹத்ராஸ் குடும்பத்திற்கு 80 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு...

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

crpf provide security to hathras victim family

 

ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 80 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளனர். 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன. 

 

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் அறிவித்தது.

 

மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று ஹத்ராஸ் வந்த சி.ஆர்.பி.எஃப் கமாண்டர் மன்மோகன் சிங் தலைமையிலான 80 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குண்டு வெடிப்பு; தமிழக சி.ஆர்.பி.எஃப் வீரர் மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
crpf soldier from Tamil Nadu was passed away in an incident in Chhattisgarh

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செங்கப்பன் என்பவரது மூத்த மகன் கோகுல். இவர் மும்பையில் துணை ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் தேவன் (30) சத்தீஸ்கர் மாநிலத்தில் CRPF வீரராகப் பணியாற்றி வந்தார்.

இதனிடையே   சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அதில் குடியாத்தம் கணவாய் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தேவன் குண்டு வெடிப்பில் பலியானார். இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. இதனிடையே தேவன் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

crpf soldier from Tamil Nadu was passed away in an incident in Chhattisgarh

வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப்  வீரரின் உடலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சி.ஆர்.பி.எஃப் சவுத் ஐ.ஜி ஷாரு சின்ஹா தலைமையில் 50க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கலந்துகொண்டு துணை ராணுவத்தினர் அணி வகுப்புடன் உடலை எடுத்துக்கொண்டு அவருடைய விவசாய நிலத்திலேயே 21 குண்டு முழங்க நல்லடக்கம் செய்தனர்.