Skip to main content

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்... வீட்டிக்குள் நடைபெற்ற திருமணம்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
sd



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 


இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், உயிரிழப்புக்கள் முதலியவற்றிற்கு 20க்கும் குறைவானவர்களே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவுறுத்தலின் பேரில் இன்று ஒரு திருமணம் உறவினர்கள் யாரும் இல்லாமல் வீட்டிற்குள்ளே நடைபெற்று முடிந்ததுள்ளது. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் 10க்கும் குறைவான நபர்களே பங்கேற்றனர். மணமகனின் தந்தை புற்று நோய் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதித்து இருந்த காரணத்தால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த அந்த திருமணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்