
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஜெட்பூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் ரத்த வெள்ளத்தோடு இளைஞர் ஒருவரின் உடல் ஒன்று கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் சவுரப் ஷர்மா (24) என்பது தெரியவந்தது. மேலும், சவுரப் ஷர்மாவின் கழுத்தை கூர்மையாக ஆயுதத்தைக் கொண்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
நேற்று இரவு தனது குடும்பத்தினரிடம் பேசிய சவுரப் ஷர்மாவின் செல்போன் இரவு 9 மணிக்கு மேல் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது. இரவு முழுக்க ஷர்மா வீட்டுக்கு வராதததால், அவரது குடும்பத்தினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், தான் அரசு பள்ளி வகுப்பறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சவுரப் ஷர்மா கடைசியாக தனது மைத்துனர் ராஜுவிடம் பேசியதால், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளியில் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.