இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,068 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,463 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இந்தியாவில் கரோனா தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. இந்த மஹாராஷ்டிரா மாநில மும்பையை சேர்ந்த 63 வயது நபர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இந்தியாவில் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 60- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.