Skip to main content

இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு!!

corona

 

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது. 20,27,074 பேருக்கு இதுவரை இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 41,585 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 13.78 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 886  பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 49,679 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் 6.07 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 2.07 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 67.62 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 2.27 கோடி  கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 5.74 ஆயிரம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.   

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்