இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,37,702 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 85 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் நான்கு இந்தியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் இருவர் பலியாகியுள்ளனர்.