சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத்தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 160க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இதன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ரயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த மாதம் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமான டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கை மிக குறைவான உள்ள ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 168 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.