Skip to main content

2005 நிவாரணப் பணிக்கும், 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு?- ப.சிதம்பரம் கேள்வி

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

congress senior leader and former union minister chidambaram tweet

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பா.ஜ.க. முடிச்சு போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? அந்தமான் தீவின் சுனாமி நிவாரணத்துக்கு ராஜீவ்காந்தி அறக்கட்டளை 2005-இல் ரூபாய் 20 லட்சம் பெற்றது உண்மைதான். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப்பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை வேண்டுமா?” - ப.சிதம்பரம்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

P. Chidambaram commented on BJP's tolerance

 

“விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். 

 

ஒடிஷா ரயில் விபத்து மற்றும் சிபிஐ விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் 4% மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது ஏன்? காலிப் பணியிடங்களை 9 ஆண்டுகளாக நிரப்பாதது ஏன்? என்பன போன்ற 11 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களான சதானந்த கவுடா, தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் போன்றோர் பதில் கடிதம் அனுப்பினர். அதில் வாட்ஸாப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது உங்களைப் போன்ற தலைவருக்கு பொருத்தமானது இல்லை எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

 

இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கார்கேவின் கடிதத்திற்கு பாஜக எம்.பி.க்களின் பதில் பாஜகவின் சகிப்புத்தன்மையின்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கேவிற்கு பிரதமருக்கு கடிதம் எழுத உரிமை உண்டு. அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் பதில் சொல்லக்கூட தகுதியற்றவராக பிரதமர் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சிஏஜி அறிக்கைகள் கார்கேவின் விமர்சனத்தை உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இவர்களால் விமர்சனத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது. நேற்று தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், “பிரதமரை விமர்சிப்பவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியிருந்தார். விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” எனக் கூறினார்.

 

 

 

Next Story

"கவலைப்படவில்லையா...?” - அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

are you not worried kapil sibal question to amit shah

 

கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படவில்லையா என அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

பிரபல ரவுடி  சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம்  (07.06.2023) அழைத்து வரப்பட்டார் அப்போது அங்கு இருந்த மர்ம கும்பலால் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நிகழ்ந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் ட்விட்டரில், "கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச மாநில போலீஸ் காவலில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்த சஞ்சீவ் ஜீவா லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அத்திக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ் பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன், எப்படி இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அமித்ஷா அவர்களே நீங்கள் இது பற்றி கவலைப்படவில்லையா. இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.