Skip to main content

9 நாளில் 1400 கோடி சுருட்டல்; “மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - காங்கிரஸ்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

Congress says Central government should issue white paper who swindled crores from gujarat people

 

குஜராத்தில் போலி கால்பந்தாட்ட பந்தய செயலி மூலம், சீனர் ஒருவர் ரூ.1400 கோடி மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

 

சீனாவைச் சேர்ந்த வூ உயன்பே என்பவர் இந்தியர்கள் சிலருடன் சேர்ந்து ஆன்லைன் கால்பந்தாட்ட செயலியை உருவாக்கினார். இந்த செயலியை பயன்படுத்தி குஜராத் உள்ளூர் மக்கள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர். அதன் பின்னர் இந்த செயலியின் பயன்பாடு திடீரென்று செயல்படாமல் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர் . இந்த செயலி மூலம், சீனாவை சேர்ந்த வூ உயன்பே வெறும் 9 நாளில் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி சீனாவுக்கு சென்றுவிட்டார். இது குறித்து குஜராத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் இதுவரை 9 பேர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “ எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. ஆனால், இந்தியர்களை ஏமாற்றி மோசடி செய்த சீனா நாட்டை சேர்ந்த வூ உயன்பே மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தில் பதற்றமான நகரங்களில்  சீனா நாட்டவர் தங்கி ஒன்பது நாட்களில்  1200 பேரிடம் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு சீனாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

 

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இருந்த மாநிலத்தில் இத்தகைய மோசடி நடந்துள்ளது. அவர்கள் இது மாதிரியான மோசடியை தடுக்க முடியாது. பிரதமருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார். இந்த மோசடி குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி மற்றும் இப்போது வூ உயன்பே என தொடர்ந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்து தப்பித்து வருகிறார்கள்.

 

ஆனால், அவர்கள் மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம், பிரதமர் மோடி, அரசு பொது பணத்தின் பாதுகாவலர் அல்ல என்பது தெரிகிறது. மாறாக, அவர் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல விரும்பும் நபர்களுக்கு உதவும்  பயண நிறுவனமாக செயல்படுகிறார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 

சீன நபரின் மோசடி குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் வரை குஜராத் காவல்துறைக்கு 1088 புகார்கள் வந்துள்ளன. மேலும், ஹெல்ப்லைன் மூலம் 3600க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு சீன செயலியை தடை செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் இருந்து தப்பி செல்வதற்கு முன் விசாரணை அமைப்புகள் அவரை ஏன் கைது செய்யவில்லை. விசாரணை அமைப்புகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் விசாரணை செய்து வருகின்றன. இது தான் மோடி மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டமா?" என்று கேள்வி எழுப்பினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்” - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

jairam ramesh Review Prime Minister will go to any extent to save his image

 

பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பின்னணியில் வைத்து செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டு கொண்டுள்ளது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து நமது பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். முதலில் ராணுவத்தில் செல்பி பாயிண்ட்ஸ் அமைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, மூத்த அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

 

தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்பு சந்திரயான் 3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கு முன்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் தனது படத்தை அச்சிட்டு வழங்கினார். இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அறுவறுப்பான பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வடகொரியா சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். இதற்கு தகுந்த பதிலை மக்கள் கூடிய விரைவில் பிரதமர் மோடிக்கு தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

போர் விமானத்தில் பறந்த மோடி

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Modi flew in a fighter jet

 

பிரதமர் மோடி போர்  விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்திய போர் படையில் இருக்கும் தேஜஸ் எனும் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். விமான போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி, கையசைத்தபடி உற்சாகமாக பயணம் செய்யும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த பயணம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது' என தெரிவித்துள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்