கரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் (71) காலமானார்.
ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அகமது பட்டேலின் உயிர் பிரிந்தது. குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகமது பட்டேல் தேர்வானார். இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.