
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், விலை உயர்வு மற்றும் பண வீக்கத்துக்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணியைக் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பேரணியில் உரையாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தப் பேரணி தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநர், டெல்லியில் காங்கிரஸ் பேரணியை நடத்த அனுமதி தர மறுத்ததால் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "மோடி அரசின் பாரபட்சமான சதியின் காரணமாக டெல்லியின் துணை நிலை ஆளுநர் காங்கிரஸ் பேரணிக்கு அனுமதியை மறுத்துள்ளார்" என கூறியுள்ளார்.