Skip to main content

பிரியங்கா காந்தியா..? பிரியங்கா சோப்ராவா..? கன்ஃபியூஸ் ஆன காங்கிரஸ் மூத்த தலைவர்...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் பிரியங்கா காந்திக்கு கோஷமிடுவதற்கு பதிலாக, பிரியங்கா சோப்ராவுக்கு கோஷமிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

congress leader confues between priyanka chopra and priyanka gandhi

 

 

டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் டெல்லியின் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர் கே.ஆர், "பிரியங்கா காந்தி வாழ்க" என கோஷமிடுவதற்கு பதிலாக, "பிரியங்கா சோப்ரா வாழ்க" என கோஷமிட்டார். "சோனியா காந்தி ஜிந்தாபாத்! காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத்! ராகுல் காந்தி ஜிந்தாபாத்! பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்!" என அவர் முழக்கமிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“19 வயதில் தியாகத்தைப் புரிந்துகொண்டேன்” - பிரியங்கா காந்தி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Priyanka Gandhi questioned How much longer will you blame the Congress

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகம், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ராம்நகர் பகுதியில் இன்று (13-04-24) காங்கிரஸ் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (பாஜக) எவ்வளவு காலம் காங்கிரசை குற்றம் சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளனர்; இப்போது அவர்கள் 400 மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்வதால், அவர்களுக்கு பெரும்பான்மை வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தரகாண்டில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் ஆகியவை எப்படி வந்திருக்கும்?. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. ஜவஹர்லால் நேரு இதை உருவாக்கவில்லை என்றால், இது சாத்தியமா?

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைப் பயன்படுத்தித் தலைவர்களை தங்கள் கட்சிக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதால் வேலைவாய்ப்பையும் பணவீக்கத்தையும் மறந்துவிட்டார்கள். அப்போது, ​​தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதும், நன்கொடை பெற்று வியாபாரம் செய்வது குறித்து பிரச்சனை எழுந்தது. இப்போது சொல்லுங்கள் யார் ஊழல்வாதி என்று.

எனது 19 வயதில், என் தந்தையின் சிதைந்த உடலை என் தாய் முன் வைத்தபோது, நான் தியாகத்தைப் புரிந்துகொண்டேன். அவர்கள் என் குடும்பத்தாரை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்தாலும், என் தியாகி தந்தையை அவமதித்தாலும், எங்கள் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்கள் இதயங்களில் இந்த நாட்டின் மீது நம்பிக்கையும், உண்மையான பக்தியும் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

ஸ்மிருதி இராணிக்கு போட்டியாக பிரியங்கா காந்தியின் கணவர்?

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Priyanka Gandhi's husband to compete with Smriti Rani?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். ஆனால், அதே வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமேதி தொகுதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டு விட்டார்கள். அமேதியின் தற்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி ராணியை தேர்ந்தெடுத்தற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். 

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்.பி.யாக வேண்டும் என்று அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் இணைந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

2004, 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.