கடந்த சில நாட்களாகசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்து வெளிவந்திருக்கும் ஒரு அடார் லவ் படத்தின் ‘மாணிக்ய மலராயி பூவி’ பாடல்தான். அதில் சில நொடிகளே வந்து கண்சிமிட்டிச் செல்லும் பிரியா வாரியர்தான் தற்போது இளசுகளின் ஹாட் டாபிக்.

Priya

இந்தப் பாடலில் இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியிருப்பதாகக் கூறி, ஐதராபாத்தில் உள்ள ஃபலக்நூமா காவல்நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். அதாவது இந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அதில் தீர்க்கதரிசி முகமதுவை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து ஃபலக்நூமா காவல்நிலைய உயரதிகாரி சையது ஃபையாஸ், ‘சில இஸ்லாமியர்கள் காவல்நிலையத்திற்கு வந்து‘மாணிக்ய மலராயி பூவி’ பாடல் இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியிருப்பதாகக்கூறி புகாரளித்தனர். அவர்கள் எந்தவிதமான வீடியோ ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நாங்கள் அதைக் கொண்டுவருமாறு கூறியிருக்கிறோம். அதனால், இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை’ என தெரிவித்துள்ளார். பிரியா வாரியர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை.

ஒரு அடார் லவ் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு, ‘இந்தப் பாடல் உலகில் உள்ள பல கோடி பேருக்கு பிடித்திருக்கிறது. ஆனால், சில மிகச்சிறுபாண்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள்தான் இதை எதிர்க்கின்றனர்’ என விளக்கமளித்துள்ளார்.